Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. பலரும் படுகாயமடைந்த சோகம்…. அதிகாரியை நியமித்த அமைச்சகம்….!!

கனடாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளதாக தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்னும் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பலரையும் மீட்புக்குழுவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சகம் கூறியதாவது, ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |