மாட்டு வண்டிகள் வாயிலாக மணலை அள்ளுவதற்கு குவாரிகள் அமைக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது .
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டுவண்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஜெகநாதன் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதை மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் வாங்கிகொண்டார். அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் இருக்கின்றது. ஆனால் தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிகள் இல்லை.
இதனால் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் பசி பட்டினியுடன் இருக்கின்றோம். இவ்வாறு கட்டுமான தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகள் பட்டினியால் சாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அதன்பின் எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் கல்வி, பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆகவே எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு தமிழகஅரசு மாட்டு வண்டிகளில் மணலை அள்ளுவதற்கு ஒலக்காசி பஞ்சாயத்தில் பாலாற்றில் குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.