ஆப்கானிஸ்தானில், தலீபான்கள் ஒரு விமானத்தின் இறக்கையில் துளையிட்டு கயிற்றை கட்டி அதில், ஊஞ்சலாடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன், தலீபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். மேலும், அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்களை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பெண்களின் இந்த போராட்டம் தொடர்பில் செய்தி திரட்டிய பத்திரிகையாளர்களையும் சிறை வைத்து தலீபான்கள் சித்திரவதை செய்தனர். இதில், அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை வெளிகாட்டும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Afghanistan is thrown to this clowns. pic.twitter.com/vlRxKIBdEt
— Ihtesham Afghan (@IhteshamAfghan) September 9, 2021
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நாட்டின் ஆயுதப்படைக்குரிய ஒரு போர் விமானத்தின் இறக்கையில், துளையை போட்டு அதில் கயிற்றைக் கட்டி, பலகையை அதனுடன் இணைத்து தலீபான் அமைப்பை சேர்ந்த ஒருவர் அதில் ஊஞ்சலாடிக்கொண்டிருகிறார். அதனை, தலீபான்கள் இருவர் தள்ளி விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.