ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கனிந்திருந்தது. 13 ரன்கள் எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீடிலின் பந்துவீச்சை தெர்ட் மென்(Third man side) திசைக்குத் தட்டிவிட்டு மூன்று ரன்கள் ஓட ஒட்டுமொத்த மைதானமே கரகோஷம் எழுப்பியது.
இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த லாராவின் சாதனையை (11593 ரன்கள்) இவர் முறியடித்தார். இதையடுத்து, மொஹாலியில் பட்டாசுகளெல்லாம் வெடிக்கவிட்டு சச்சினின் சாதனை கொண்டாடப்பட்டது.அப்போது கமெண்ட்ரியில் ரவிசாஸ்திரி, ”Its Diwali at Mohali” எனக் கூறினார்.
அவர் கூறியதைப் போலவே, சச்சின் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் தீபாவளி பண்டிகையை மொஹாலியில் கொண்டாடினர். இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றொடு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிசிசிஐ சச்சினின் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது.தற்போது இந்த வீடியோவை 90ஸ் கிட்ஸ்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பழைய நினைவை கொண்டாடிவருகின்றனர். இப்போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சச்சின் அடித்த ரன்களும் படைத்த சாதனைகளும் ரசிகர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.
This Day in 2008 – @sachin_rt surpassed Brian Lara to become the highest run-scorer in Tests 🙌🙌 pic.twitter.com/XoRTNF2zAs
— BCCI (@BCCI) October 17, 2019