Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் ‘எண்ணித் துணிக’… டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் எண்ணித் துணிக படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எண்ணித் துணிக படத்தின் டீஸரை இன்று சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அதிரடியான டீஸர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

Categories

Tech |