Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்… காவல்துறையினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரிட்டனில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள டட்டஸ்டன் என்ற நகரில் ஆரோன் ஓ ஹல்லோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்திற்குள் தனது மிட்சுபிஷி காருடன் சென்றுள்ளார். மேலும் சுமார் அரை மைல் தூரத்துக்கு காரை ஆஸ்டன் பகுதியை நோக்கி தண்டவாளத்தில் இறக்கியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்டவாளத்தின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த காரினுள் இருந்த செல்போன் மூலம் ஆரோனை கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு ஆரோன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவருக்கு 156 பவுண்ட் தொகை அபராதமும், 15 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் சுமார் 23 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் நிர்வாகம் மற்றும் பயணிகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Categories

Tech |