Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதற்கு கீழ தான் நடக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

மலை அடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகர் மலையின் அடிவார பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்ட சுதீஷ் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய மூன்று சேவல்கள், இரண்டு கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |