ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் மக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஆஸ்திரேலிய நாட்டில் சிறுவர்களுக்கான சிறையில் தண்டனை பெற்ற, டைலான் வோலர் என்பவர் தொடர்பில் ஒரு ஊடகம், முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதற்கு முகநூல் பயனாளர்கள் பலரும் மோசமாக கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே டைலான் கடந்த 2017ம் வருடத்தில் முகநூல் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், மக்கள் பதிவிடும் மோசமான கருத்துக்களுக்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று தீர்ப்பளித்து விட்டது. இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், முகநூலில் வெளியாகும் சர்ச்சைக்குரிய செய்திகளில், மக்கள் மோசமான கருத்துக்களை பதிவிட்டால் அதனை வெளியிடக்கூடிய பதிப்பாளர் என்ற அடிப்படையில் முகநூல் நிறுவனம் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு அவர்கள் தான் பொறுப்பு, என்று கூறி முகநூல் நிறுவனம் தப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது.