மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை பாளையங்கோட்டை வாய்க்கால் பகுதியில் நிறுத்தி விட்டு பக்கத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பால வெங்கடேஷ் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பால வெங்கடேஷ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தனகுமார், மாதவன் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.