வட அமெரிக்க நாட்டில் கனமழையும், நிலநடுக்கமும் ஒரே நாளில் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலுள்ளார்கள்.
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றாக மெக்சிகோவும் உள்ளது. இந்த மெக்சிகோ நாட்டில் டவுண்டவுன் என்னும் நகரம் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் புகுந்துள்ளது.
மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே நிற்கும் கார்களை அடித்துச் சென்றுள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குள்ளும் திடீரென பெய்த கனமழையால் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க அதே நாளில் மெக்சிகோவிலுள்ள பெப்லோமாடரோ என்னும் பகுதியில் ரிக்டரில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் தொடர்ந்து தாக்கிய 2 பேரிடர்களால் மெக்சிகோ நாட்டிலுள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலுள்ளார்கள்.