பெண்கள் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக போராடுவதை அடக்குவதற்காக தலீபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் ஆப்கான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் பறி போகுமோ என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தேவையின்றி எவரும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் கோஷமிடுதல், கைகளில் வாசகங்களை ஏந்தி செல்லுதல் போன்ற செயலுக்கு முன்னதாகவே அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் அவர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். இதனை அடக்குவதற்காக இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.