Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு…. தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அதிகமாக செலவாகும் என்பதால் கருத்தடையின் பயன்பாடுகள் குறைந்து பெண்களின் பாதுகாப்பிற்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் என்ற கூற்றை முன்வைத்து அடுத்தாண்டு தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 25 வயது வரை இருக்கும் இளம்பெண்களுக்கு கருத்தடை இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 21 மில்லியன் யூரோக்கள் வருடந்தோறும் செலவாகும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, அதிகமாக செலவாகும் என்பதால் கருத்தடையின் பயன்பாடு குறைந்து பெண்களின் பாதுகாப்பிற்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |