பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ணுப்பிள்ளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் சந்திராவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கீழே இறங்கி வந்து ராஜேந்திரனை அடித்து விட்டு அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.