கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள செஞ்சை செக்கடி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சேகர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரின் வீட்டில் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சேகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.