சந்தையில் முககவசம் அணியாமல் இருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள முப்பையூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடி உள்ளனர். இதனால் இம்மாவட்ட தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சமூக இடைவெளி இல்லாமல் கடைகளை நெருக்கமாகப் போட்டு வியாபாரம் நடத்தியதை தாசில்தார் பார்த்துள்ளார். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை காரணத்தினால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வாரம் வருகின்ற புதன் கிழமை சந்தையில் கடை நடத்துபவர்கள் அனைவரும் முகவாசம் போட்டிருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லை எனில் போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காய்கறிகள் மற்றும் மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.