Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! மனக்குழப்பம் நீங்கும்….! பொறுமை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கண்டிப்பாக நன்மை ஏற்படும்.

இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தும் எந்த உணவையும் தொடவேண்டாம். மனைவியால் உறவுகளுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். மனக்குழப்பம் கண்டிப்பாக நீங்கும். தெளிவான மனநிலை இருக்கும். ஒரு முடிவு எடுக்கும்போது இல்லத்தில் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். மனைவிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும். அன்பை விட அதிக அளவு கோபப்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். அந்தஸ்து கண்டிப்பாக அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வெற்றிகரமாக எதையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தை கொடுக்கும். கண்டிப்பாக நன்மை ஏற்படும்.

இன்றைய நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யோசித்து எதையும் செய்ய வேண்டும். சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மாலை நேரத்தில் சரியாகிவிடும். பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும். இல்ல தேவைகள் பூர்த்தியாகும். காதலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் சதுர்த்தி என்பதினால் விநாயகரை வழிபட்டு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி 3 நிமிடங்கள் தியானத்தில் இருந்து விநாயகரை வழிபடவேண்டும். எல்லாவிதமான நன்மையையும் உங்களுக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |