தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் திருவிழாக்கள், அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.