Categories
கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில்… “விநாயகர் சிலை வைக்க முயற்சி”… போலீசார் குவிப்பு!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன..

அந்த வகையில், கள்ளக்குறிச்சி சுமங்கலி நகர் பகுதியில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து இளைஞர்கள் வழிபட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.. அதேபோல தஞ்சை சீனிவாசபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை போலீஸ் பறிமுதல் செய்தனர்.. நெல்லையில் கோயில்கள் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையினர் அகற்றினர்.. திருச்சி மணப்பாறை அருகே கொட்டப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்..

 

Categories

Tech |