11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து இதே போல் போடியை அடுத்துள்ள தம்மிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞன் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் போடி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த 2 புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் மாணவிகளை கடத்திக்கொண்டு சென்ற ஹரிஹரசுதன் மற்றும் கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.