Categories
Uncategorized உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. பலியான சிறுவன்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் சிறுவனை தாக்கிவிட்டு சென்றுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பகுதியில் ஓல்ட் டிராஃபோர்ட் என்னும் இடத்தில் நார்டன் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் 16 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன்  உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும்  இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எவரேனும் சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்தால் உடனடியாக போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |