Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் !!

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்..

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கிறார்..

இதனையடுத்து செப்டம்பர் 24-ஆம் தேதி ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி.. அதனை தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |