Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” பட மோஷன் போஸ்டர் வெளியீடு…..மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை இன்று காலை வெளியான நிலையில், அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

அதில் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கின்ற ஹீப்ளி நதிக்கரை ஓரம் இருக்கும் ஹவ்ரா பிரிட்ஜ் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ரஜினி அமர்ந்து வரும் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் w.p. என குறிப்பிடப் பட்டுள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்டதாக படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |