Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. பாரதிய கிசான் சங்கத்தினரின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரதிய கிசான் சங்கத்தினர் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விளை கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவசாய விளை பொருள்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும் எனவும், பாலை விவசாய விளை பொருளாக அறிவித்து லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அமராவதி அணையை தூர்வாரி பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனவும், சின்ன வெங்காய ஏற்றுமதி மண்டலமாக திருப்பூரை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேங்காய் கொப்பரைக்கு அதிகபட்ச விலையாக ரூ.150 அறிவிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் திருமலைசாமி, செயலாளர் சேனாபதி, கோட்ட பொறுப்பாளர் அருள்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பாரதிய கிசான் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர்.

Categories

Tech |