ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் அன்பறிவு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு, நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் காஷ்மிரா கதாநாயகியாக நடிக்கிறார்.
https://www.instagram.com/p/CTmcE3LIgQ-/?utm_source=ig_embed&ig_rid=0a508c3d-41db-4795-ab84-f69185362ba7
மேலும் நெப்போலியன், சாய் குமார், ஊர்வசி, சங்கீதா, வித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அன்பறிவு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வெளிநாட்டில் நடைபெற்று வந்த இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .