Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு வேறு வழியில்லை’…. கண்ணீருடன் ஈரான் தம்பதியினர்…. பேட்டி எடுத்த பிரபல பத்திரிக்கை….!!

பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழையும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது தொடர்பாக வெளியுறவு செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவிற்கு மக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிரான்சில் இருந்து கடல் எல்லையைத் தாண்டி படகுகளில் வருகின்றனர். அவர்களை திருப்பி அனுப்பும் விதமாக சட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து பிரித்தானியா வெளியுறவு செயலாளர் பிரீத்தி பட்டேல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் திட்டத்தையும் மீறி நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருக்கும் கலாயிஸ் துறைமுகத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற பிரபல பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் கண்ணீருடன் நிற்கும் ஈரான் தம்பதியினரான Ahmed மற்றும் அவரின் மனைவி  Yalda இருவரையும் பேட்டி எடுத்துள்ளார்.

அதில் அவர்கள் கூறியதாவது ” பிரித்தானியாவுக்குள் நுழையும் பெரும்பாலானோரை திருப்பி அனுப்புவது தொடர்பாக பிரீத்தி பட்டேல் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வெளியான செய்தியை எங்களது தொலைபேசியில் படித்தோம். மேலும் இந்த செய்தி உண்மைதானா என்று Ahmedன் மனைவி Yalda கண்ணீருடன் கேட்டார். எங்களை திருப்பி அனுப்பப் போகிறார்களா என்றும் கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியது, நாங்கள் இன்று இரவே பிரித்தானியாவிற்குள் நுழையப் போகிறோம். அதற்காக 2000 யூரோக்களை செலவழித்தோம்.

அவர்கள் எங்களை காப்பாற்றாமல் கைவிட்டு விட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு வேறு வழி கிடையாது. மேலும் எங்களை காப்பாற்றாவிட்டால் இந்த படகிலேயே துளைபோட்டு தண்ணீரில் மூழ்கும்படி பார்த்தாலாவது அனைவரையும் மீட்டு ஒருவேளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என Ahmed கூறியுள்ளார். அதிலும் பிரான்சில் எங்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாங்கள் வேலை செய்து வாழ விரும்புகிறோம். ஏதோவொரு வேலை செய்து பிழைக்க தயாராக இருக்கிறோம்” என்று கண்ணீருடன் Yalda கூறியுள்ளார். இவர்களின் கண்ணீரை கொண்டு உருகுவோர் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |