குடிபோதையில் மரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பழைய தாலுகா அலுவலகம் அருகில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என பல பேர் நின்று கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வளாகத்தில் இருந்த வேப்ப மரத்தில் வேகமாக ஏறியுள்ளார். இதனையடுத்து மரத்தின் கிளையில் துண்டை கட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த வாலிபர் மிரட்டல் விடுத்ததோடு, தனக்கு மரணதண்டனை வழங்க வேண்டுமெனவும் கோஷமிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை சமாதானம் செய்து கீழே வரவழைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மலையாண்டிபட்டினம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குடிபோதையில் மரத்தின் மீது ஏறி மணிகண்டன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் காவல்துறையினர் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.