Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த ராட்சத மரம்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் டோக்கன்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்த போது சிலர் அங்கிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த ராட்சத மரம் முறிந்து நிழற்குடையின் மீது விழுந்து விட்டது.

இதனால் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு தீயணைப்புத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |