சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உமத்சிங், ராணா சிங் மற்றும் கான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.