மீனம் ராசி அன்பர்களே.! வாக்குறுதிகளை பூர்த்தி செய்து விடுவீர்கள்.
இன்று பார்ப்பதற்கு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலம் சீராகும். தெய்வீக ஈடுபாட்டில் நம்பிக்கை கொள்ள வேண்டும். எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மனக்கவலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படக் கூடிய அளவில் நடந்து கொள்வீர்கள். உங்களைப் பற்றி பல தவறான கருத்துகள் வரும். சின்னதாக குழப்பங்கள் இருக்கும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணத்தின்போது உடமைகள் மீது கவனம் வேண்டும். வாக்குறுதிகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். வசீகரமான தோற்றம் பெறுவீர்கள்.
காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். காதல் கண்டிப்பாக வெற்றி ஏற்படுத்தி தரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சென்று வரவேண்டும். மாணவர்களுக்கு எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இருக்காது. சக மாணவர்களை மட்டும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் பொறுமையாக இருந்து சரி செய்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் மஞ்சள்