Categories
அரசியல்

அவங்களும் தஞ்சாவூராம்…. அட ஒரே ஊர்க்காரங்களா…. செல்லும் வழியில் முதல்வர் சுவாரசியம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகள் பாலசுப்ரமணியம்- நாகரத்தினம். இவர்கள் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்கின்றனர். அப்போது அந்த வழியே முதல்வர் ஸ்டாலின் செல்லும்போதெல்லாம் இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அதே வழியாக முதல்வர் வருவார் என்று வழக்கம்போல வணக்கம் தெரிவிக்க அந்த தம்பதிகள் காத்திருந்தனர்.

அதேபோன்று அவ்வழியாக வந்த முதல்வர் காரை விட்டு இறங்கி வந்து அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அந்த வயதான தம்பதியினர், தினமும் காலை இந்த நேரத்தில்தான் முதல்வரின் கார் கடந்து செல்லும். நாங்கள் இருவரும் அந்த நேரத்தில் முதல்வருக்கு வணக்கம் தெரிவிப்போம். அவரும் பதிலுக்கு வணக்கம் கூறுவார். இன்று எதிர்பாராத விதமாக அவரே காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது இணையதளத்தில் வைரலாக பரவிய நிலையில், அடிக்கடி தனக்கு வணக்கம் வைக்கும் அந்த வயதான தம்பதியினருக்கு, முதல்வர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி வந்து நலம் விசாரித்துள்ளார். அவர்களும் தஞ்சாவூர்காரர்களாம். ஆனால் எப்படியோ ஒரே ஊர்க்காரங்க அடையாளம் கண்டுபிடிச்சி ஒன்னா சேர்த்திடுறாங்க என்று நெட்டிசன்கள் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |