Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்…. சிஎஸ்கே அணி வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ….. வைரல்….!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, ஜெகதீசன், சாய் கிஷோர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

blob:https://www.facebook.com/fba903f4-2d8f-4063-9c1f-624f46c8ea7d

Categories

Tech |