அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் 24 முறை ஓடிப்போன மனைவி, தற்போது 25 முறையும் ஓடிப்போய் உள்ளார்.
அசாம் மாநிலம், திங் லாஹ்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது 3 குழந்தைகள் உள்ளது. இதில் கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றது. கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது குழந்தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தது, மனைவியை காணவில்லை. அதன்பின் அவரை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தபோது அவர் வேறொரு நபருடன் ஓடிப் போனார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இது முதன் முறையல்ல.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை 24 முறை வேறு ஒரு நபருடன் ஓடிச் சென்றுள்ளார். பின்னர் அவருடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு மீண்டும் தன் கணவரை தேடி வந்து விடுவார். கணவரும் குழந்தைகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மனைவியை மன்னித்து விடுவார். இனி இதுபோன்று தவறு செய்ய மாட்டார் என நம்பி இதுவரை 24 முறையும் தனது மனைவியை மன்னித்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர் அதே தவறை செய்து கொண்டிருக்க, தற்போது 25-வது முறை வேறு ஒரு நபருடன் சென்றுள்ளார். இந்த தகவலை அவரது கணவரும், கணவர் வீட்டினரும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.