Categories
மாநில செய்திகள்

ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்… அவர் சேகர்பாபு அல்ல, செயல் பாபு… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

அமைச்சர் சேகர்பாபு செயல் பாபுவாக பணியாற்றுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அதன் பின் பேசிய அவர், அர்ச்சகர்களுக்கு ரூ 4,000 நிதி, 15 வகையான பொருட்களை வழங்கி இருக்கிறோம். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை தரப்படும்.

கோயில் நிலங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு வருகிறது.. தமிழில் வழிபாடு தொடங்கியுள்ளது. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப் பட்டு ஒரே வாரத்தில்அமலாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டத்தை ஒரு வாரத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.. அமைச்சர் சேகர்பாபு செயல் பாபுவாக பணியாற்றுகிறார் என்றும், எள் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெயாக விரைந்து வேலை செய்கிறார் என்றும் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Categories

Tech |