வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மாதம்மாள் நீண்ட நாட்களாக வயிற்று வழியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மாதம்மாள் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாதம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாதம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவருடைய அண்ணன் கொடுத்த புகாரின்படி கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.