Categories
மாநில செய்திகள்

மாத ஊக்கத்தொகை… “13 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்”… நானே கண்காணிப்பேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத் தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான்..

24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார்.. கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அறநிலையத் துறையின் பொற்காலம் வரவிருக்கிறது.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாகயால் சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன்.. அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் சேகர் பாபு. எள் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெயாக விரைந்து வேலை செய்கிறார் என்று புகழ்ந்து பேசினார்..

Categories

Tech |