Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” கோவில்களில் சிறப்பு வழிபாடு…. ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள்….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தர்மபுரியில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதனயடுத்து சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து குமாரசாமிபேட்டை ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

அதன்பின் சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று அதே பகுதியில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவில், தெற்கு ரயில்வே லைன் ரோடு வலம்புரி விநாயகர் கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டால் மற்ற வருடங்களை காட்டிலும் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா சற்று பொலிவிழந்து காணப்பட்டது.

Categories

Tech |