Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது வெப்பமானி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் உட்பட அனைவரும் பள்ளிக்குள் நுழையும்போதே கிருமிநாசினி மூலமாக கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளி வேலை நேரங்களின் போது கூட்டம் சேருவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் வெளி நபர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |