Categories
தேசிய செய்திகள்

“என்னோட பொண்ண யாரோ கடத்திடாங்க”… திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்… கதறும் பெற்றோர்கள்…!!!!

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். பெற்றோர்கள் மகளை காணவில்லை என்று அவரது நண்பர்கள் வீட்டில் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.

இதையடுத்து பீரோவில் அந்த பெண்ணின் திருமணத்திற்காக வழங்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகை என அனைத்தும் காணாமல் போனது. தனது மகள் நகை பணத்துடன் காதலருடன் ஓடிச் சென்று விட்டாரா? என்று சந்தேகித்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் வேறு ஒரு மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவர் தனது மகளை மதம் மாற்றி வலுக்கட்டாயமாக பெயர் மாற்றம் செய்ய வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். என் மகளை ஏமாற்றி அந்த வாலிபர் கடத்தி சென்றதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |