14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் நடுரோட்டில் அந்த சிறுமியை இறக்கி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒருவர் தோட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அப்போது அந்த வீட்டிற்கு அருகில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்தபோது சிறுமியை கடத்தி சென்ற மனோஜ்குமார் மூணாறு அருகே இறக்கிவிட்டு, பின்னர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து சொந்த ஊரான ராஜபாளையத்தில் மனோஜ்குமார் தலைமறைவாக இருப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.