ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தது.
மேலும், ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி அளிக்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. இதில் 14 நாட்களுக்கு பதிலாக 7 நாட்கள் மட்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. தொடர்ந்து ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை, மருந்துப் பொருட்கள், ஏசி உள்ளிட்ட வசதிகளை வழங்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், வீட்டு உணவு, மேற்கத்திய கழிவறை, மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை மட்டும் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.