முதல்வர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்..
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.. அதன்படி நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின், பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.. மேலும் அவர், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்..
இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை மகாகவி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்..