கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு முககவசம் இன்றி வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னபள்ளம் பகுதியில் அம்மாபேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து சின்னபள்ளம் பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர் குமார் ஜெகதீஷ் குமார் வெங்கடேஸ்வரன் சரவணன் சீனிவாசன் ரகுபதி ராஜசேகர் ஐசக் ஆகியோர்கள் வள்ளி குமார், ஜெகதீஷ்குமார், வெங்கடேஸ்வரன்,சரவணன், சீனிவாச ரகுபதி, ராஜசேகர் ஐசக் போன்றோர் அடங்கிய குழுவினர் காவல்துறையினரின் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் நிறுத்தி மக்கள் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்று சோதனை மேற்கொண்டனர். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினர். அதன்பின் நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகம் கூடும் மண்டபங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.