Categories
தேசிய செய்திகள்

பனாரஸ் இந்து பல்கலையில்… பாரதியார் பெயரில் ‘தமிழாய்வு’ இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உ.பி மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று தெரிவித்துள்ளார்..

இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைகழகங்களில் எப்பொழுதுமே உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இடம்பெறும்.. அந்த பல்கலைக்கழகத்தில் தான் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக மகாகவி பாரதியாரின் பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாரதியாரின் நினைவு நாளின் போது அறிவித்திருக்கிறார்..

இந்த அறிவிப்பின் மூலமாக வட இந்தியாவில் தமிழ் தொடர்பான விரிவான ஆய்வுகள் இனி வரக்கூடிய நாட்களில் நடத்தப்படும்.. ஏற்கனவே டெல்லியில் இருக்கக்கூடிய அலிகார் பல்கலைக்கழகம், உத்திரபிரதேச இருக்கக்கூடிய அலிகார் பல்கலைக்கழகம், டெல்லி ஜே.என்.யூ  பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழையும், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வந்தாலும் கூட மிக முக்கியமான வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் என்பது மிக முக்கியமானது.

இதன் மூலமாக தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் மொழியை ஆய்வு செய்யக் கூடிய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.. அது மட்டுமில்லாமல் வட மாநில மொழிகளுக்கும், குறிப்பாக இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றிற்கும், தமிழ் மொழிக்கும் இடையேயான இணைப்பு பாலத்தை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் என்பதும் உருவாகும்.

ஏற்கனவே தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட தமிழர்களின் பண்டைய பாரம்பரியம் தொடர்பான ஆய்வுகள் எல்லாம் மிக விரிவான முறையில் நடத்தக் கூடிய நிலையில், பிரசித்தி பெற்ற கல்லூரியில் இனி வரக்கூடிய நாளில் பாரதியாரின் பெயரில் அமையக்கூடிய இருக்கை என்பது மிக முக்கியமானது..

தமிழ் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொள்வதற்கு வழிவகுப்பதாக இது அமையும். அதுவும் பாரதியாரின் பெயரில் இந்த இருக்கை என்பது பிரதமர் மோடி அறிவித்திருப்பது என்பது தமிழ் ஆர்வலர்களிடம் நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..

 

Categories

Tech |