Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” மேலும் சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொலை வழக்கில் தேடிவந்த மேலும் 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ஆம் தேதி அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பழனிச்சாமி, சதாம் உசேன் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து மேலும் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கொலை வழக்கில் மொத்தம் 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து வாலிபர் வினோத்குமார் கொலை வழக்கில் மேலும் பலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சேலம் குகை பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், சுந்தர், அர்ஜுன், புகழேந்தி, சுரேஷ், பிரபு, மொட்டையன், மதன், விஜய் மற்றும் 15 வயது சிறுவன் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |