அர்ஜென்டினாவில் மகள் மற்றும் பேத்தி உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்ட நபர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவில் உள்ள Cordoba என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில், Alma Mia Molina மற்றும் Agustina Reynoso ஆகிய இருவரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த Rolando Busto என்ற நபர், அது நம் பிள்ளைகளாக இருக்கக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
ஆனால், விபத்தில் பலியானது அவரது மகள் மற்றும் பேத்தி என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது Rolando Busto-ரின் மகனான Matias Bustos Reynoso என்பவர் வாகனத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது, திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் 131 அடி உயரமுடைய பாறையிலிருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில், வாகனத்தின் பின்புறம் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். வாகனத்தை ஓட்டிய நபர் மற்றும் அவரது சகோதரியான கர்ப்பிணிப் பெண் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து தொடர்பில், Rolando Busto தெரிவித்துள்ளதாவது, செய்தியை தொலைக்காட்சியில் கண்டவுடன் அது என் பிள்ளைகளாக இருந்து விடக்கூடாது என்றுதான் வேண்டிக்கொண்டேன்.
அவர்கள் நான்கு பேரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில், அது என் பிள்ளைகள் என்றும் அதில் இருவர் பலியானதாகவும் செய்தி வெளியானது. அவர்கள் வாகனத்தில் சென்ற சமயத்தில் மூடுபனி இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கி விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.