Categories
திருப்பத்தூர்

மொத்தம் 1,70,000…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஸ்கூட்டரில் வைத்திருந்த 1,70,000 ரூபாயை திருடிச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரகவுண்டனூர் பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் தங்க நகை அடகு வைத்து அதன் மூலமாக 1, 70, 000 ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து ஸ்கூட்டரில் வைத்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியில் இருக்கும் மற்றொரு தனியார் வங்கிக்கு வந்த மாமியாரை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் பணம் வைத்திருந்த டிக்கி திறந்து கிடந்ததை கண்டு அரசுகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறகு அதில் வைத்திருந்த 1,70,000 ரூபாயை யாரோ திருடி சென்றது அவருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அரசுகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் ஹெல்மெட் அணிந்திருந்த 2 நபர்கள் ஸ்கூட்டரின் டிக்கியை திறந்து பணத்தை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்துள்ளது. மேலும் இந்த காட்சியில் பதிவானவர்களின் உருவங்களை அடையாளமாகக் கொண்டு காவல்துறையினர் 2 நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |