வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது மணியின் வீடு இடிந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையை இடிந்து விழுந்த சுவற்றை அகற்றியுள்ளனர். அப்போது சுவரின் இடுக்கில் சிக்கிய நிலையில் மணி உயிரிழந்து கிடந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.