செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி அருகில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு செண்டை மேள கலைஞர்கள் 11 பேர் கேரள மாநிலத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிகள் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பாலக்காடு சேட்டப்படி பகுதியில் வசித்து வரும் விஷ்ணு என்ற கலைஞரும் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து செண்டை மேளக் குழுவினர் விஷ்ணுவை உடனடியாக மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.