Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் .

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான  அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஜெர்மனியை சேர்ந்த  ஸ்வரேவ் ஆகியோர் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக நடைபெற்றது .

இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்க்கு, ஸ்வரேவ் கடும் சவால் கொடுத்தார் .இதனை சுதாரித்துக் கொண்டு ஆடிய ஜோகோவிச் இறுதியாக 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . இதையடுத்து இறுதிப்போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த மெட்வதேவுடன்  ஜோகோவிச் மோத உள்ளார்.

Categories

Tech |