இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருப்பதாவது, நேற்று இரவு நேரத்தில் காசாவிற்கு அருகிலிருக்கும் இஸ்ரேலின் எல்லைப்பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு சைரன் ஒலி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது காசாவிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் ராணுவம், நடு வானிலேயே அதனை தடுத்து அழித்து விட்டது.
תיעוד: אתר של חמאס בשם "ירושלים"(אל-קודס) יעד בתוכו הופצץ | צפו#Gaza #Israel pic.twitter.com/V33uaanIWV
— אדיר לחקים Adir Lehakim (@AdirLM1) September 11, 2021
இதனைத் தொடர்ந்து, ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் காசாவின் ஹமாஸ் பகுதியில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.